இதழ் - 83 இதழ் - ௮௩
நாள் : 26-11-2023 நாள் : ௨௬-௧௧-௨௦௨௩
பழமொழி – 83
” புல் தடுக்கிப் பயில்வான் போல ”
விளக்கம்
சிறிய புல் (தாவரம்) தடுக்கி விழுந்து பயில்வான் ஆகிவிட்டான் என்று இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
சந்திரகுப்தன் என்ற அரசனின் அரசவையில் கௌடில்யர் என்ற புலவர் இருந்தார். இவர் ஒருமுறை காட்டு வழியே செல்லும்போது சிறிய புல் காலில் சிக்கி கீழே விழுந்துவிட்டார். உடனே அந்த புல்லை வேருடன் பிடுங்கி எரித்துக் கரைத்து குடித்து விட்டார்.
இந்தச் செயலுக்கு விளக்கம் கேட்ட மன்னரிடம், நமக்கு எதிரிகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் அவர்களை வேருடன் அழித்துவிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் வளர்ந்து பெரும் ஆபத்தாகத்திகழ்வார்கள் என்று கௌடில்யர் தன் அர்த்தசாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்கிறார்.
இக்கருத்தை உணர்த்தவே “புல் தடுக்கிப் பயில்வான் போல“ என்ற பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment