இதழ் - 145 இதழ் - ௧௪௫
நாள் : 16 - 02 - 2025 நாள் : ௧௬ - ௦௨ - ௨௦௨௫
விடை
விடை
- ஒருவர் மற்றவரிடம் வினா கேட்கின்றபோது அவர் அவ்வினாவிற்கு ஏற்ப பதிலுரைப்பதை விடை என்கிறோம்.
விடையின் வகைகள்
- விடையானது எட்டு வகைப்படும்.
- சுட்டுவிடை
- மறைவிடை
- நேர்விடை
- ஏவல் விடை
- வினா எதிர் வினாதல் விடை
- உற்றது உரைத்தல் விடை
- உறுவது கூறல் விடை
- இனமொழி விடை
- முதல் மூன்று வகையும் (நேர், சுட்டு, மறை ) நேரடி விடையாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனப்படும்.
- அடுத்த ஐந்து விடைகளும் (ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனப்படும்.
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப"
- நன்னூல் நூற்பா எண். 386
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment