இதழ் - 144 இதழ் - ௧௪௪
நாள் : 09 - 02 - 2025 நாள் : ௦௯ - ௦௨ - ௨௦௨௫
வினா வகை
கொடை வினா
- பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவும் வினா கொடை வினா ஆகும்.
சான்று
- 'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? ' என்று கொடுப்பதற்காக வினவும் வினா கொடை வினா ஆகும்.
ஏவல் வினா
- ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது ஏவல் வினா ஆகும்.
சான்று
- 'வீட்டில் பருப்பு இல்லை நீ கடைக்குச் செல்கிறாயா?' என்று அம்மா மகனிடம் வினவி வேலையைச் சொல்லுதல் ஏவல் வினா ஆகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment