பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 78                                                                                                   இதழ் - 
நாள் : 22-10-2023                                                                                   நாள் : -0-௨௦௨௩
  
   
பழமொழி – 78

இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது
 
விளக்கம்
    ஒருவனுக்கு ஊழ்வினையால் துன்பம் வருவதாயினும், அதனை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாமே தவிரத் தெய்வங்களைத் தொழுது அதனால் அத்துன்பத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்பது இப்பழமொழியின்  பொருளாகும்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது

    காவலன் ஒருவன் தன் காவல் பணியைக் கைவிட்டால் ஆநிரைகளைக் (பசு கூட்டம்) காப்பாற்றமுடியாது. அதுபோலவே எழுத்தாளன் ஒருவன் தன் ஓலையில், முதலில் தவறாக எழுதிவிட்டால்  அத்தவற்றை அதே ஓலையில் சாிசெய்யவும் இயலாது. அதுபோல, ஒருவன் தனக்கு துன்பங்கள் வரும்போது அத்துன்பத்திலிருந்து மீழ்வது குறித்து சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து இவ்வுலகைப் படைத்த இறைவன் தன்துன்பத்தைப் போக்குவான் என்பது அறியாமையே ஆகும். இதனையே 'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது' என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணா்த்துகிறது.
 
  மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment