இதழ் - 132 இதழ் - ௧௩௨
நாள் : 03- 11 - 2024 நாள் : ௦௩ - ௧௧ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 132
” உவர்நிலம் உட்கொதிக்கு மாறு ”
விளக்கம்
களர் நிலத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பி நிலத்தின் வெப்பத்தினைத் தணிக்க முயன்றாலும் களர் நிலத்தின் உள்ளே உள்ள கொதிப்பு மாறாமல் நிலைத்திருக்கும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
'உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'
களர் நிலத்தைச் சுற்றி சுவர் எழுப்பினாலும் களர் நிலத்தின் உள்வெப்பம் எவ்வாறு தணியாமல் இருக்குமோ அதேபோலத்தான் பகைவர் ஒருவரிடம் கொள்ளும் நட்பும் அதைப் புதுப்பிப்பதால் அவரின் நிலை மாறாது என்பதும் ஆகும்.
அவர்கள் எப்போதும் தன் இயல்பான உட்கொதிப்பைக் (பகைமையை) கொண்டிருப்பர் என்பதை 'உவர்நிலம் உட்கொதிக்கு மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment