பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 88                                                                                                     இதழ் - 
நாள் : 31-12-2023                                                                                        நாள் : --௨௦௨௩

     
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழில் வழங்கப்படும்

உருதுமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


சுர்மாகண் மை
சோக்குபகட்டு
எக்கச்சக்கம்தொங்கு பை
சோல்னாதாயத்து / சுருள் தகடு
நாசுக்குநயத்திறன்
 
  
  • சுர்மா கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
  • கண்மை கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

  • அவன் சோக்காக இருக்கிறான்.
  • அவன் பகட்டாக இருக்கிறான்.

  • எனது சோல்னாவுக்குள் புத்தகங்கள்தான் இருக்கும்.
  • எனது தொங்குபைக்குள் புத்தகங்கள்தான் இருக்கும்.

  • குழந்தைகளுக்கு தாயத்தைக் கட்டுவார்கள்.
  • குழந்தைகளுக்கு சுருள்தகட்டைக் கட்டுவார்கள்.

  • சில இடங்களில் நாசுக்காகப் பேச வேண்டும்.
  • சில இடங்களில் நயத்திறத்துடன் பேச வேண்டும்.

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment