பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 155                                                                                இதழ் - 
நாள் : 27 - 04 - 2025                                                            நாள் :   - ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 155

“  எய்தவன் இருக்க அம்பை நோவானேன்  

விளக்கம்
 
அம்பை ஒருவன் எய்தவன் இருக்கும் போது அவனைக் கடிந்து கொள்ளாமல் துன்பம் தரும் அம்பை எதற்கு நொந்து கொள்ள வேண்டும் என்பது இப்பழமொழிக்கு விளக்கம் ஆகும்.


“ எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ”

உண்மை விளக்கம்

இங்கு ஒருவன் மீது வீண்பழி சுமத்துவது தவறு என்பதைக் குறிக்கவே இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க அவனைக் கடிந்து கொள்ளாமல் வீணாகக் குற்றம்  சுமத்தப்பட்டவனிடம் கடிந்து கொள்வதும் நொந்து கொள்வதும் தவறு என்பதைக் குறிக்கவே “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…


முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment