இதழ் - 125 இதழ் - ௧௨௫
நாள் : 15- 09 - 2024 நாள் : ௧௫ - ௦௯ - ௨௦௨௪
உலகமாதேவி
இராஜராஜன் தேவியருள் சிறப்புற்று விளங்கியவள் உலகமாதேவி. அவள் பெயரால் அமைந்த நகரம் தென் ஆர்க்காட்டிலுள்ள உலகமாதேவிபுரம், அவ்வூர்ப் பெயர் ஒலகபுரம் எனவும், ஒலகாபுரம் எனவும் மருவி வழங்குகின்றது. செங்கற்பட்டு நாட்டிலுள்ள மணிமங்கலம் என்னும் ஊர் உலகமாதேவி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்கள் கூறுகின்றன. திருவையாற்றுக் கோயிலில் உள்ள உத்தர கைலாசம் என்னும் உலோகாமாதேவீச்சரம் இம்மாதேவியால் கட்டப்பட்டதாகும்.
திரிபுவன மாதேவி
திரிபுவன மாதேவி என்பது மற்றொரு தேவியின் பெயர். இவளே இராஜேந்திரனைப் பெற்ற தாய். புதுவை நாட்டில் உள்ள திரிபுவனி என்னும் ஊர் இவள் பெயர் தாங்கி நிற்பதாகும். அவ்வூரின் பெயர் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதன் சிதைவாகத் தெரிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment