பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 93                                                                                                       இதழ் - 
நாள் : 04-02-2024                                                                                      நாள் : 0-0-௨௦௨

 
பூப்பெயர்ப் புணர்ச்சி

பூப்பெயர்ப் புணர்ச்சி
  • பூ என்னும் சொல் நிலை மொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகும். இவ்வாறு புணர்வது மட்டுமின்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு. எனினும் மெல்லினமெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.
சான்று (இயல்பாக)
  •  பூ  + கொடி   = பூங்கொடி
  •  பூ + தொட்டி = பூந்தொட்டி
 
வல்லின எழுத்திற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணர்ந்தது.
  •  பூ + தொட்டி =  பூத்தொட்டி
  •  பூ + கூடை   =  பூக்கூடை
பூப்பெயர் முன் வல்லின எழுத்தும் மிகுந்து வந்துள்ளது.
  • “பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்” 
  • (நன்னூல் நூற்பா எண். 200)


     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment