பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 65                                                                                          இதழ் -
நாள் : 23-07-2023                                                                           நாள் : ௨௩-0-௨௦௨௩
 

 
 
நத்தம்
 
     முற்காலத்தில் ஊருக்குப் பொதுவாக அமைந்த இடம் நத்தம் என்றழைக்கப்பட்டது. அத்தகைய இடம் குடியிருப்பாக மாறிய பின்னரும் நத்தம் என்ற பழைய பெயர் மறையாமல் அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை நாட்டிலுள்ள கீழ்நத்தம், மேல்நத்தம் என்னும் ஊர்களும், மதுரையிலுள்ள பிள்ளையார் நத்தமும், தென் ஆர்க்காட்டிலுள்ள திருப்பணி நத்தமும், செங்கற்பட்டிலுள்ள பெரிய நத்தமும் இத்தகைய ஊர்ப்பெயருக்குச் சான்றாகும்.
 
     சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்தில் வெட்டை வெளியான இடத்தில் ஒரு நத்தம் இருந்தது. அது பொட்டல் நத்தம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அப்பெயர் தேய்ந்து சிதைந்து பொட்டணம் ஆயிற்று. பழைய பொட்டலும் நத்தமும் இப்போது பொட்டணத்தில் அமைந்திருத்தலைக் காண்பது ஒரு புதுமையான செய்தியாக இருப்பதை அறியமுடிகிறது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment