இதழ் – 10 இதழ் – ௰
நாள் : 03-07-2022 நாள் : ௦௩-௦௭-௨௦௨௨
1. கிருஷ்ணகிரி
‘கிருஷ்ணா' என்பது 'கறுப்பு' என்றும், “கிரி” என்பது 'மலை' என்றும் பொருள்படும். இப்பகுதியில் கறுப்பு கிரானைட் மலைகள் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதி கிருஷ்ணதேவராயர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் கிருஷ்ணகிரி எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
இப்பகுதி கிருஷ்ணதேவராயர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் கிருஷ்ணகிரி எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
2. கரூர் - கருவூர்
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டது. அப்பெயா் நாளடைவில் மருவி 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர்=கருவூர் என்பது கரூர் என மருவியது.
சோழ, பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது. தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம்.

3. திண்டுக்கல் – திண்டீஸ்வரம்
'திண்டு' அதாவது 'தலையணை' போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும், மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் 'திண்டு', 'கல்' ஆகிய இரண்டு சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் 'திண்டுக்கல்' என்று பெயர் வந்ததாகக் கருதலாம்.
இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர் ஆகும். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களைத் துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவப்பெருமான் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

4. நாகப்பட்டினம் – நாகை
7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தாம் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் இந்நகரத்தை "நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை" என்று அழைக்கப்பட்டது.
சோழர் காலத்தில், இந்நகரம் ஒரு முக்கியமான துறைமுகமாக இருந்த காரணத்தால் பட்டினம் என்ற சொல் இணைக்கப்பட்டு நாகைப்பட்டினம் என மாறியது. நாளடைவில் அப்பெயர் மருவி நாகப்பட்டினம் ஆயிற்று.
5. திருவாரூர் - ஆரூர்
ஆத்தி மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் ஆரூர் என்ற பெயர்பெற்றது. இவ்வூர் தேவாரப் பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. பாடல் பெற்ற தலமாதலால் 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் (திரு - லட்சுமி, ஆர் - பூமாதேவி பூஜித்தது) என பெயர் பெற்றது.
”வேதாரண்யம் விளக்கழகு”, ”திருவாரூர் தேரழகு”, ”திருவிடைமருதூர் தெருவழகு”, ”மன்னார்குடி மதிலழகு” போன்ற முதுமொழிகள் மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

( தொடர்ந்து அறிவோம் . . . )
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment