இதழ் - 164 இதழ் - ௧௬௪
நாள் : 06 - 07 - 2025 நாள் : ௦௬ - ௦௭ - ௨௦௨௫
தமிழ்ப் புலவரான சோமசுந்தரப் புலவர் 'தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்டவர். ஈழவள நாட்டில் யாழ்ப்பாணத்தி உள்ள நவாலி என்ற ஊரில் பிறந்தார். தனது தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். இராமலிங்க உபாத்தியாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்து விடமும் ஆங்கிலம் கற்றார்.
சிறுவர் பாடல்கள், சிற்றிலக்கியச் செய்யுள்கள், உரைநடை நூல்கள், செய்யுள்கள், நாடகம் என எழுதியுள்ளார். இவரதுபனை வரலாறு பற்றிய தாலவிலாசம் முக்கியமான படைப்பாகும்.
சைவ சமயியான இவர் நாற்பது ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தமிழையும் சைவத்தையும் தன் இரு கண்கள் எனக் கொண்டவர்.
1927 இல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிளியும் புலவர் பட்டமும் வழங்கினர்.
ஏறக்குறைய 15,000 பாடல்களை இயற்றிய இவரது தனிச்சிறப்பு சிலேடை வெண்பா இயற்றுவது ஆகும். ஏறத்தாழ 60 வருடங்களுக்கு மேலாகத் தமிழுக்குத் தொண்டாற்றிய 'தங்கத்தாத்தா' தனது 75 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
( வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்... )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment