இதழ் - 68 இதழ் - ௬அ
நாள் : 13-08-2023 நாள் : ௧௩-0அ-௨௦௨௩
அரணும் அமர்க்களமும்
தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள் பல இருந்தன. அரசனுக்குரிய மனை அரண்மனையென்று அழைக்கப்பட்டது. அரண் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களால் அறியலாம்.
எயில் ஆகாய என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். ஆகாயம் வழியாகச் செல்லும் கோட்டை போன்ற விமானங்களைத் 'தூங்கு எயில்’ என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. தொண்டை நாட்டில் பண்டை நாளில் இருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயில் கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்கோட்டத்திலே தொண்டை நாட்டின் தலை நகராகிய காஞ்சி மாநகரம் விளங்கிற்று. அக்காரணத்தால் காஞ்சியை எயிற்பதி என்று சேக்கிழார் குறித்துப் போந்தார். காஞ்சி நகரம் ஓர் அழகிய மயில் போன்ற கோட்டையாக விளங்கிற்றென்பது நன்கு விளங்கும்.
பண்டை நாளில் பாண்டி நாட்டில் எயில்கள் பல இருந்தன. பூதப் பாண்டியனுடைய சிறந்த நண்பனாகிய சிற்றரசன் ஒருவன் எயில் என்ற ஊரில் இருந்து ஆண்டவந்துள்ளமையை அறிய முடிகிறது. இவ்வாறு பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட அரண் அல்லது கோட்டையின் பெயரால் பல ஊர்கள் பழங்காலத்தில் வழங்கி வந்துள்ளமை வெளிப்படுகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment