பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 165                                                                           இதழ் - ௧
நாள் : 13 - 07 - 2025                                                         நாள் :  -  - ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 165

எல்லாம்பொய் அட்டூணே வாய் '

விளக்கம்
   உதவுவார் என்று நம்பிய ஒருவரிடம் தான் கேட்ட உதவி கிடைக்கப்பெறவில்லை எனில் தாமே அச்செயலைச் செய்து கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து அவரையே திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும். 
     
உண்மை விளக்கம்
         சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
         தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
         செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
         'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.

    ஒருவன் தன்னைச் சார்ந்த ஒருவரிம் உதவி கேட்கும் போது அவர் அந்த உதவியைச் செய்யவில்லை எனில் அந்த நபர் எத்தகைய துன்பத்தில் உள்ளார் என்பதை அறிந்து அவருக்கு உதவி செய்யவேண்டும். அதைத் தவிர்த்து அவரை விட்டு விலகுவதோ மீண்டும் மீண்டும் அவரிடமே கேட்டுக் கொண்டிருப்பது தவறான செயல் ஆகும் என்பதைக் குறிக்கவே 'எல்லாம்பொய் அட்டூணே வாய்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment