பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் -  50                                                                                                     இதழ் - ௫0
நாள் : 09-04-2023                                                                                        நாள் : 0௯-0௪-௨௦௨௩

     
 
நான்காம் வேற்றுமை
     
    நான்காம் வேற்றுமையின் உருபு ‘கு’ ஆகும். இது பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பொருளை உணர்த்தும்.
 
சான்று
  • வேலைக்குச் சென்றேன்.
  • கடைக்குச் சென்றேன்.
     இவ்வாக்கியங்களில் வந்துள்ள வேலை, கடை என்ற பெயர்ச்சொற்களின் இறுதியில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்து வந்து பொருளை உணர்த்துகிறது.
 
    நான்காம் வேற்றுமை உருபு கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
 
சான்று
  • கொடை  -    முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
  • பகை    -    நெருப்பிற்கு நீர் பகை.
  • நட்பு    -    ஔவைக்கு உற்ற நண்பன் அதியமான்.
  • தகுதி    -    ஆசிரியருக்கு அழகு குற்றமறக் கற்பித்தல்.
  • அதுவாதல்   -    தயிருக்குப் பால் வாங்கினான்.
  • பொருட்டு   -    கூலிக்கு வேலை செய்தான்.
  • முறை   -    செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ.
  • எல்லை  -    தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்.
 
     இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment