பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 29                                                            இதழ் -
நாள் : 13-11-2022                                               நாள் : - ௧௧ - ௨௦௨௨

 
 
பழமொழி – 29
 
“பாத்திரம் அறிந்து பிச்சை போடு“
 
     ஒருவனுக்குப் பிச்சை போடும் போது, பிச்சையெடுப்பவனின் பாத்திரம் அறிந்து போட வேண்டும் என்று நாம் தவறாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்
 
“பா“ திறம் அறிந்து பிச்சை போடு
 
     சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களிடத்தில் பாடிப் பரிசில் பெறுவதும் மன்னர் புலவர்களின் பாடல் திறத்திற்கு ஏற்பப் பரிசு கொடுப்பதும் வழக்கம். அதாவது புலவன் பாடக்கூடிய திறத்தினை அறிந்து அதற்கேற்ப பரிசில் வழங்க வேண்டும் என்பதை மன்னர்க்கு உணர்த்தவே “பா“திறம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இங்கு, “பா“ என்றால் பாட்டு என்று பொருள்.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment