பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 129                                                                                       இதழ் - ௧
நாள் : 13- 10 - 2024                                                                       நாள் :  -  - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 129


” நடந்தால் நாடெல்லாம் உறவு - படுத்தால் பாயும் பகை 


விளக்கம்

ஒருவன் ஊரெல்லாம் நடந்து சென்றால் செல்லும் இடமெல்லாம் நட்பு கிடைக்கும். ஆனால் சோம்பேறித்தனமாக வீட்டில் படுத்துக்கிடந்தால் பாயும் பகையாகும் என்பது இப்பழமொழிக்கு நாம் புரிந்துகொள்ளும் விளக்கமாகும்.



” நடந்தால் நாடெல்லாம் உறவு - படுத்தால் பாயும் பகை 


உண்மை விளக்கம்

ஒருவன் பல்வேறு ஊர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் போது தன் அறிவு நிலை மேம்படுவதுடன் அறிஞர் பெருமக்களுடன் நல்ல நட்பும் கிடைக்கிறது. அதே மனிதன் சோம்பேறித்தனமாக வீட்டிலேயே இருந்து பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தால் எத்தகைய பயனும் கிடைக்காது. அவ்வாறு இருப்பின் தான் படுத்திருந்த பாயும் பகையாகும் என்பதை உணர்த்தவே “நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment