பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 60                                                                                          இதழ் - 0
நாள் : 18-06-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 

 
பெரியதும் சிறியதும்

    பெருக்கமும் சுருக்கமும் சில ஊர்ப் பெயர்களில் பொருந்தி வருவதைக் காணலாம். கொங்கு நாட்டி முற்காலத்தில் பெரியதோர் ஊராக விளங்கியது பேரூர் ஆகும். தஞ்சை நாட்டிலுள்ள பேரளம் என்னும் ஊரும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரும்புலியூரும் பெரிய ஊர்களாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகின்றது. 

    சிறிய ஊர்கள் சிற்றூர் என்று பெயர் பெற்றன. அத்தகைய சிற்றூர்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு ஜில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவத்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு நாளடைவில் திருச்சிற்றேமம் ஆயிற்று. அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment