இதழ் - 94 இதழ் - ௯௪
நாள் : 11-02-2024 நாள் : ௧௧-0௨-௨௦௨௪
திசைப்பெயர்ப் புணர்ச்சி
திசைப்பெயர்ப் புணர்ச்சி
- திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், திசைப்பெயரோடு பிற பெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.
- முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகும்.
- திசைப்பெயர்களோடு வேறு திசைப்பெயர்களோ, பிற சொற்களோ வந்து புணரும் பொழுது நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிமையெழுத்தும் (கு), ககர (க்), ஒற்றும் நீங்கிப் புணரும். அவை நீங்கிய பின் நிலைமொழியின் இறுதியில் உள்ள றகரம்(ற்) ‘ன’கரமாகவோ ‘ல’கரமாகவோ (ல்) திரிந்தும் புணரும்.
சான்று
- வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
- வடக்கு + மேற்கு = வடமேற்கு
சான்று (இயல்பாக)
- தெற்கு + மேற்கு = தென்மேற்கு
- தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு என்னும் திசைப் பெயரோடு மேற்கு, கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் சேரும்போது நிலைமொழியின் இறுதியில் உள்ள ‘கு‘ நீங்கும். பிறகு 'ற'கர மெய் 'ன'கரமாகிப் புணரும்.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment