பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 40                                                                                       இதழ் - ௪0
நாள் : 29-01-2023                                                                         நாள் : -0-௨௦௨
 
 
 
 
திணை
 
திணை
    திணை என்பது ஒழுக்கம், நாகரிகம், பிரிவு, குலம், இனம் முதலான பல பொருள் குறித்த ஒரு சொல்லாகும். சொல் இலக்கணத்தில் அமைந்த திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளில் அமைகிறது.

வகைகள்
    திணைஇரண்டு வகைப்படும்.
        1. உயர்திணை
        2. அஃறிணை

சான்று
    “மக்கள் தேவர் நரகர் உயர்திணை
    மற்று யிருள்ளவும் இல்லவும் அஃறிணை”     - (நன்னூல், நூற்பா.எண். 26)

1. உயர்திணை
    உயர்திணை என்பது பகுத்தறிவு கொண்ட மக்கள், தேவர், நரகர் ஆகிய மூவரையும் குறிக்கும்.

சான்று
  • மக்கள்    -    ஆண், பெண்
  • தேவர்        -    சிவன், முருகன், திருமகள்
  • நரகர்        -     அசுரன், அரக்கன்

2. அஃறிணை

    அல் + திணை = அஃறிணை எனப் பிரிக்கலாம். உயர்வு அல்லாத திணை அஃறிணை எனப்படும்.
    அஃறிணை என்பது மக்கள், தேவர், நரகர் அல்லாத பிற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களைக் குறிக்கும் .

சான்று
  • உயிருள்ள அஃறிணைப் பொருட்கள்     -  பசு, கிளி, மரம்
  • உயிரற்ற அஃறிணைப் பொருட்கள்       -  கல், மண், மலை
 
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment