இதழ் - 86 இதழ் - ௮௬
நாள் : 17-12-2023 நாள் : ௧௭-௧௨-௨௦௨௩
புணர்ச்சி
உயிர் முன் உயிர்புணர்ச்சி
- இ ஈ ஐவழி யவ்வும்
- இ, ஈ, ஐ கார வீற்றுச் சிறப்பு விதி நிலைமொழியின் ஈற்றில் 'இ, ஈ, ஐ' என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும்.
- அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் 'யகரம்' உடம்படுமெய்யாக வரும்.
சான்று
- காட்சியழகு - காட்சி + ய் + அழகு (இகர ஈறு)
- தீயணைப்பான் - தீ + ய் + அணைப்பான் (ஈகார ஈறு)
- கலையறிவு - கலை + ய் +அறிவு (ஐகார ஈறு)
ஏனை உயிர்வழி வவ்வும்
- இ, ஈ, ஐ தவிர பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது அவற்றின் முன் வருமொழியில் 12 உயிர்களும் வந்து புணர்கையில் 'வகர' மெய் தோன்றும்.
சான்று
- பல + வ் + இடங்கள் - பலவிடங்கள் (அகர ஈறு)
- நிலா + வ் + அழகு - நிலாவழகு (ஆகார ஈறு)
- திரு + வ் + அருள் - திருவருள் (உகர ஈறு)
- கோ + வ் + இல் - கோவில் (ஓகார ஈறு)
ஏ முன் இவ் விருமையும்
- நிலைமொழியின் ஈற்றில் ஏ என்னும் உயிரெழுத்து நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிரெழுத்து வந்தால் அவற்றிற்கு இடையே யகரம், வகரம் ஆகிய இரண்டும் உடம்படுமெய்களாக வரும்.
சான்று
- சே + அடி - சேவடி
- சே + அடி - சேயடி
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment