பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 
இதழ் - 27                                                                                    இதழ் -
நாள் : 30 - 10 - 2022                                                                  நாள் : - - ௨௦௨௨

 
 
பழமொழி – 27
 
“அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்“
 
     ஒருவன் சரியான பாதையில் செல்ல வேண்டுமானால், அடித்தால்தான் சரியான பாதையில் செல்வான் என்றும் அடி (கையால், குச்சியால் அடித்தல்) உதவுவது போல அண்ணன், தம்பி, உறவினர் என எவரும் உதவமாட்டார்கள் என்று நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்
 
“அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்“
 
     ஒருவன் தனக்கான நிலத்தில் முதல் அடியை எடுத்து வைத்து  விவசாயம் செய்ய முற்பட்டான் எனில் அவன் முன்னேற்றத்தினை யாராளும் தடுக்க முடியாது. நிலத்தில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்குப் பலனைத் தருவதைப் போல நம் சகோதரர்களோ உறவினர்களோ பயன்தர மாட்டார்கள் என்பதையே அடி (நிலத்தில் எடுத்து வைக்கும் அடி) உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.

      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment