பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 19                                                                     இதழ் -  
நாள் : 04-09-2022                                                      நாள் : ௦௪-௦௯- ௨௦௨௨

 
வணக்கம்.   
 
     இதுவரை நாம் தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்கள், மராத்தியச் சொற்கள், அரபுச் சொற்கள் ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். 
 
     இந்த வாரம் தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச் சொற்கள் எவை என்பதனைப் பார்க்கலாம்.

  • டமாரம் அடிக்கும் வழக்கத்தை நிறுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • முரசு அடிக்கும் வழக்கத்தை நிறுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • பல சோலியாக ஓடித் திரிகிறேன்.
  • பல பணியாக ஓடித் திரிகிறேன்.
  • தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள் ஜாஸ்தி.
  • தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள் மிகுதி.
  • மரத்தை ரம்பத்தினால் அறுத்தான்.
  • மரத்தை முள்வாளினால் அறுத்தான்.
  • முருகப்பெருமான் தேரில் பவனி வருவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.
  • முருகப்பெருமான் தேரில் உலா வருவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.
  
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
 

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
  
 
 

No comments:

Post a Comment