பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 196                                                                           இதழ் - ௧
நாள்  :  05 / 04 / 2026                                                     நாள்   :  0 / 0 / ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 196

சொல் புத்தி இல்லாவிட்டாலும் சுய புத்தி வேண்டும் '

விளக்கம்
     பிறர் சொல்லி கேட்காவிட்டாலும் சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்று இந்தப் பழமொழியை விளங்கிக் கொள்கிறோம்.


                 ' சுயபுத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும் '

உண்மை விளக்கம்
    மேற்கண்ட பழமொழியை சற்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் சுயமாகச் சிந்திக்கும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்நேரத்தில் அனுபவமிக்கச் சான்றோர்களின் அறிவுரைப்படி கேட்டு நடந்து கொண்டால் தவறுகள் ஏற்படாமல் அச்செயலைச் செய்யலாம் என்பதைக் குறிக்கவே “சுயபுத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும்” என்று இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment