இதழ் - 175 இதழ் - ௧௭௫
நாள் : 21-09-2025 நாள் : ௨௧-௦௯-௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 175
' இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை '
விளக்கம்
ஆற்றின் ஒரு கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுவிற்கு ஆற்றின் அடுத்த கரையில் இருக்கும் புல் பசுமையாகத் தோன்றும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
இங்கு ஆற்றின் கரைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களைக் குறிப்பால் உணர்த்தினாலும் இப்பழமொழி, மனிதர்கள் பலர் தங்களின் நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து அடுத்தவர்களிடம் இருக்கும் செல்வத்தை பார்த்து பொறாமை கொள்ளக் கூடாது என்றும் தம்மிடம் உள்ள செல்வத்தைக் கொண்டே மகிழ்வுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment