இதழ் - 44 இதழ் - ௪௪
நாள் : 26-02-2023 நாள் : ௨௬-0௨-௨௦௨௩ வீரன் ஒருவன் தன் பகைவரிடம் நெருங்கிச் சென்று நண்பரைப் போல நடந்து அப்பகைவரை அழிக்க வல்ல வீரர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்'.
ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்'.
'மன வேறுபாடு' என்பது, எத்திறன் கொண்ட மனிதர்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டை அறிந்த ஒருவன் பகைவர்களின் பகைப்புலத்தில் நுழைந்து நண்பரைப் போல அவர்களுடன் உரையாடி அப்பகைப்புலத்தினை வென்று வருவானாயின் அத்தகைய திறமிக்க வீரர்களைக் கொண்டு நூறு பகைவர்களையும் வென்று விடலாம் என்பதையே 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment