பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 86                                                                                                       இதழ் - 
நாள் : 17-12-2023                                                                                          நாள் : --௨௦௨௩



பழமொழி – 86

” இறக்கும்மை யாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல் 
 

விளக்கம்

    ஒரு ஆட்டை(ஆடு) வெட்டப்போகும் முன் அந்த  ஆட்டிடம் உன்னை இக்காரணத்திற்காக வெட்டப்போகிறோம் என்று கூறுதல் இல்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
        காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி
        இடம்பட்ட கண்ணாய்! 'இறக்கும்மை யாட்டை
        உடம்படுத்து வெளவுண்டார் இல்'.

    நாம் ஒரு ஆட்டை வெட்டுவதற்கு எவ்வாறு அதனிடம் சம்மதம் கேட்பதில்லையோ அதைப்போன்றே, ஒரு செயலைச் செய்ய தகுதியற்ற ஒருவரிடம் அவரின் தகுதியற்ற தன்மையை உணர்த்திக்காட்டி அவரை அப்பணியிலிருந்து விலக்க வேண்டாம். அதற்குப்பதிலாக அத்தகைய நபர் அச்செயலுக்குத் தகுதியற்றவர் என்று உணர்ந்த அக்கணமே அப்பணியிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்பதையே 'இறக்கும்மை யாட்டை உடம்படுத்து வெளவுண்டார் இல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

  மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment