இதழ் - 81 இதழ் - ௮௧
நாள் : 12-11-2023 நாள் : ௧௨-௧௧-௨௦௨௩
பழமொழி – 81
” மண்ணைத் தின்றாலும் மறையத் திண்ணனும் ”
விளக்கம்
நாம் மண்ணைத் தின்றாலும் மறைத்து வைத்துத் திண்ண வேண்டும் என்று இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
கிராமங்களில் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே திண்பண்டங்களையோ உணவுப் பொருள்களையோ தின்றுகொண்டிருந்தால் அவர்களைப் பெரியவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் முன் திண்ணக்கூடாது என்று கடிந்து கொள்வர்.
ஏனெனில் மற்ற குழந்தைகள் முன் உணவை உண்டுகொண்டிருந்தால் அவர்களுக்கு வயிற்று உபாதைகள் வர நேரிடும் என்ற நோக்கிலும் உணவில்லாக் குழந்தைகள் வருத்தமுறுவர் என்பதையும் குறிப்பால் உணர்த்தவே “மண்ணைத் தின்றாலும் மறையத் திண்ணனும்“ என்ற பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment