பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 39                                                                                          இதழ் -
நாள் : 22-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
 
முன்னிலைப்பெயர்கள்
 
    பேசுபவனது சொற்களை முன்னின்று கேட்பவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் உணர்த்தி வரும் பெயர் முன்னிலைப் பெயர் எனப்படும்.
( முன்னிருப்பவரைப் பற்றியது முன்னிலைப் பெயர் )
 
    இதிலும் ஒருவரைக் குறிப்பது முன்னிலை ஒருமைப் பெயர் எனவும், பலரைக் குறிப்பது முன்னிலைப் பன்மைப் பெயர் எனவும் இருவகையாகக் குறிப்பிடப்படுகிறது.

சான்று
  • நீ                    -    முன்னிலை ஒருமைப் பெயர்
  • நீர், நீவிர்,  நீங்கள்    -    முன்னிலைப் பன்மைப் பெயர்கள்


படர்க்கைப் பெயர்

     பேசுபவர் தன்னையும் தனக்கு முன்னால் நிற்பவர்களையும் தவிர்த்து மற்றவர்களைக் குறிக்கும் சொல் படர்க்கை எனப்படும். தம்முன்னால் இல்லாத மூன்றாம் நபரைப் படர்க்கையாகக் கொள்ளவேண்டும்.

படர்க்கை ஒருமைப்பெயர்
  • மனிதன்
  • முருகன்
  • வீடு

படர்க்கைப் பன்மைப்பெயர்
  • மனிதர்
  • வீடுகள்
  • பசுக்கள்

தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment