பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 14                                                                இதழ் - ௧௪
நாள் : 31-07-2022                                                   நாள் : ௩௧-௦௭-௨௦௨௨

  

     இந்த இதழில் நாம் தமிழ் மொழியில் கலந்துள்ள அரபு மொழிச் சொற்களையும் அவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் எவை என்பது பற்றியும் பார்க்கலாம்.

  • முதியவர் சுந்தரருக்கு அசல் ஓலையைக் காட்டினார்
  • முதியவர் சுந்தரருக்கு மூல ஓலையைக் காட்டினார்
 
  • எந்தத் தகராறும் செய்ய வேண்டாம்
  • எந்த வம்பும் செய்ய வேண்டாம்
 
  • மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மஹால் மிக அழகானது
  • மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மாளிகை மிக அழகானத

  • என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்
  • என் கேள்விக்கு மறுமொழியைச் சொல்லுங்கள்

  • காலியான பாத்திரத்தைப் பார்த்து குழந்தைகள் கண் கலங்கினர்
  • வெற்றுப் பாத்திரத்தைப் பார்த்து குழந்தைகள் கண் கலங்கினர்

 

( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020

 

No comments:

Post a Comment