பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 200                                                                        இதழ் - ௨00
நாள்  :  24 / 05 / 2026                                                     நாள்   :  ௨௪ / 0௫ / ௨௦௨௬



பழமொழி அறிவோம்

பழமொழி – 200

' விதைப்பதற்கு முன் வேலி போடு '

விளக்கம்

    ஒருவன் வயலில் பயிரை விதைப்பதற்கு முன்னர் வேலி போட வேண்டும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.

உண்மை விளக்கம்
' விதைப்பதற்கு முன் வேலி போடு '

    ஒருவன் தன் நிலத்தில் விதைப்பதற்கு முன்னர் வேலி போட்டால் மட்டுமே அப்பயிர்களை ஆடு, மாடுகள் மேயாமல் பாதுகாக்க முடியும். அவ்வாறு வேலி போடவில்லை எனில் பயிரைப் பாதுகாக்க முடியாது.

    அதுபோலவே நாம் செய்யும் செயல்கள் எதுவாய் இருப்பினும் அதை முன்னரே திட்டமிட்டு பின்வரும் பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்பதைக் குறிக்கவே “விதைப்பதற்கு முன் வேலி போடு” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment