இதழ் - 171 இதழ் - ௧௭௧
நாள் : 24 - 08 - 2025 நாள் : ௧௪- ௦௮ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 171
” சேலை கட்டிய பெண்ணை நம்பாதே”
விளக்கம்
சேலை கட்டிய பெண்களை நம்பக்கூடாது என்று மருவிய இப்பழமொழிக்கு நாம் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
”சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே”
இங்கு “சே” என்ற சொல்லுக்கு “கண்” என்ற பொருள் கொள்ள வேண்டும். அதாவது திருமணம் முடிந்த பெண்கள் தன் கணவன் இருக்கும் போது பிற ஆண்களைக் கண் அகட்டிப் பார்த்தல் தவறென்றும் அவ்வாறு பார்க்கும் பெண்களை நம்பக்கூடாது என்பதைக் குறிக்கவே “சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே” என்ற இப்பழமொழியை நம் முன்னோார்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment