பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 97                                                                                                     இதழ் - 
நாள் : 03-03-2024                                                                                    நாள் : 0-0-௨௦௨


 
பாண்டிய நாட்டு ஊர்ப்பெயர்கள் 

கோச்சடையான்

    திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன், அரிகேசரி மாறவர்மன். அவனுக்குப்பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான். கோச்சடையன் நாற்பதாண்டுகள் அரசு வீற்றிருந்த அம் மன்னன் பல்லவனோடு போர் புரிந்து பல நாடுகளை வென்று புகழ் பெற்றான். இராமநாதபுர நாட்டிலுள்ள கோச்சடை என்னும் ஊர் அவன் பெயரை தாங்கி நிற்கின்றது.

வரகுணன்

    கோச்சடை மன்னனுக்குப் பின்பு ஆட்சிப் புரிந்த பாண்டிய மன்னருள் வீரமும் சீலமும் ஒருங்கே வாய்ந்தவன் வரகுண பாண்டியன். அவன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன். பல்லவ மன்னர் வீறு குறைந்திருந்த அக்காலத்தில் தந்திவர்மன் என்னும் பல்லவனிடமிருந்து சோழ நாட்டைக் கைப்பற்றி ஆட்சிப் புரிந்தான். திருச்சிராப்பள்ளிக்கு அருகே வரகனேரி என்னும் ஊரொன்று உண்டு. வரகுணன் ஏரி என்ற பெயரே வரகனேரி என மருவியது என்பர். இதன் மூலம் இவ்வூர் வரகுண பாண்டியன் பெயரைக் கொண்டுள்ளது என்பது வெளிப்படுகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment