இதழ் - 73 இதழ் - ௭௩
நாள் : 17-09-2023 நாள் : ௧௭-0௯-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
பிராது |
முறையீடு |
பைசல் | தீர்வு |
அபகரி | கைப்பற்று |
நமஸ்தே | வணக்கம் |
பந்த் | கடையடைப்பு |
- அவர்கள் மேல் பிராது கொடுக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் மேல் முறையீடு கொடுக்கப்பட்டுள்ளது.
- அவர்கள் சிக்கல் பைசல் செய்யப்பட்டது.
- அவர்கள் சிக்கலுக்குத் தீர்வு செய்யப்பட்டது.
- அடுத்தவர் சொத்தை அபகரிக்காதே.
- அடுத்தவர் சொத்ததைக் கைப்பற்றியது.
- நமஸ்தே தோழர்களே!
- வணக்கம் தோழர்களே!
- இங்கு இரண்டு நாட்களாகப் பந்த் நடைபெறுகிறது.
- இங்கு இரண்டு நாட்களாகக் கடையடைப்பு நடைபெறுகிறது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment