இதழ் - 15 இதழ் - ௧௫
நாள் : 07-08-2022 நாள் : ௦௭-௦௮-௨௦௨௨
1. பூந்தமல்லி – பூந்தண்மல்லி
பூந்தண் என்னும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம் என்பதால் பூந்தண்மல்லி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் அப்பெயர் மருவி பூந்தமல்லி ஆயிற்று.
மல்லிகை பூக்கள் நிறைந்து காடுகள் போன்று அடர்ந்த இடமாக இருந்ததால் பூந்தமல்லி என்று அழைக்கப்பட்டது.
2. மதராஸ் – சென்னை
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தி வந்தனர். அவர்களால் இவ்விடம் மதராஸே என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் மெட்ராஸாகி இன்று சென்னை என்று அழைக்கப்படுகிறது.
3. கோடம்பாக்கம் - கோடா பாக்
குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த கோடா பாக் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அப்பெயர் மருவி இன்று கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
4. மாம்பலம் – மா அம்பலம், மாம்லான்
ஒரு காலத்தில் மிகப்பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப்பட்டது. அப்பெயர் பின்னாளில் மருவி மாம்பலம் என்று வழங்கப்படுகிறது.
மாம்லான் என்னும் ஆங்கிலேய கலெக்டர் தங்கியிருந்த இடம் மாம்லான் என்று வழங்கப்பட்டு வந்தது. அப்பெயர் மருவி இன்று மாம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
5. சைதாப்பேட்டை - சதயுபுரம்
சதயு என்னும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். 1730ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் சையத் ஷா என்பவருக்கு கொடுத்த இவ்விடம்தான் சைதாப்பேட்டை என்று மாற்றமடைந்துள்ளது.
No comments:
Post a Comment