இதழ் - 112 இதழ் - ௧௧௨
நாள் : 16 - 06 - 2024 நாள் : ௧௬ - 0௬ - ௨௦௨௪
'ன', 'ல' முன் 'ற', 'ன'வும் 'த', 'ந'க்கள்
- நிலைமொழி ஈற்றில் 'ன'கரமோ 'ல'கரமோ நின்று வருமொழி முதலில்
- 'த'கரம் வந்தால் அது 'ற'கரமாக மாறும்.
- 'ந'கரம் வந்தால் அது 'ன'கரமாக மாறும்.
“னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே''
- நன்னூல். நூற்பா. எண் 237
சான்று - 'த'கரம் 'ற'கரமாதல்
- பொன் + தீது = பொன்றீது
- கல் + தீது = கற்றீது
சான்று - 'ந'கரம் 'ன'கரமாதல்
- பொன் + நன்று = பொன்னன்று
- கல் + நன்று = கன்னன்று
'ண' 'ள' முன்னும் 'த' 'ந'க்கள்
- நிலைமொழி ஈற்றில் 'ண'கரமோ 'ள'கரமோ நின்று வருமொழி முதலில்
- 'த'கரம் வந்தால் அது 'ட'கரமாகவும்,
- 'ந'கரம் வந்தால் அது 'ண'கரமாகவும் மாறும்.
சான்று - 'த'கரம் 'ட'கரமாதல்
- மண் + தீது = மண்டீது
- முள் + தீது = முட்டீது
சான்று - 'ந'கரம் 'ண'கரமாதல்
- கண் + நீர் = கண்ணீர்
- முள் + நன்று = முண்ணன்று
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment