பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 89                                                                                                        இதழ் - 
நாள் : 07-01-2024                                                                                         நாள் : 0-0-௨௦௨
 
குற்றியலுகரம்
குற்றியலுகரம் - வகைகள்

வல்லினத் தொடர்க் குற்றியலுகரம்    
  • வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி” 
                      - நன்னூல். நூற்பா. எண்.181
சான்று
  • குரங்கு  +  பெரிது  =   குரங்கு பெரிது
  • தெள்கு +  சிறிது   =   தெள்கு சிறிது
  • நாகு    +  கடிது   =   நாகு கடிது

மென்றொடர்க் குற்றியலுகரம்
  • வேற்றுமை புணர்ச்சியில், இடைத்தொடர் முன்னும், ஆய்தத் தொடர் முன்னும், ஒற்று இடையே மிகாத நெடிற்றொடர் முன்னும், உயிர்த்தொடர் முன்னும் வரும் வல்லினம் மிகாது..
    இடைத்தொடர் ஆய்தத் தொடரொற் றிடையின்
        மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
                                  - நன்னூல். நூற்பா. எண்.182
      சான்று
      • நாகு   +  தலை   =  நாகு தலை
      • எஃகு +  சிறுமை  =  எஃகு சிறுமை

      வேற்றுமைப் புணர்ச்சி
      • மென்தொடர்க் குற்றியலுகரங்களில் சில வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு இனமான வல்லினத் தொடராய் முடியும்.
           “மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
            தம்மின வன்றொட ராகா மன்னே” 
                                  - நன்னூல். நூற்பா. எண்.184
      சான்று
      • நாகு   + தலை      =  நாகு தலை
      • எஃகு   + சிறுமை  =  எஃகு சிறுமை
           தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
       
      திருமதி. தி.செ. மகேஸ்வரி
      தமிழாசிரியர்
      ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
      சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
      கோயம்புத்தூர்-641020

      No comments:

      Post a Comment