இதழ் - 125 இதழ் - ௧௨௫
நாள் : 15- 09 - 2024 நாள் : ௧௫ - ௦௯ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 124
” ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவாரா ? ”
விளக்கம்
ஆதாயம் (இலாபம்) இல்லாமல் செட்டியார் (வியாபாரி) ஆற்றோடு போகமாட்டார் என்று நாம் இப்பழமொழிக்கு பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
” ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவாரா ? ”
உண்மை விளக்கம்
இங்கு ஆதாயம் என்னும் சொல் “ஆ”தானம் என்றும். (ஆ-பசு). ஆற்றோடு என்னும் சொல் ஆற்றாமல் என்றும் வரவேண்டும்.
முற்காலத்தில் பசுவைத் தானம் செய்து வந்தனர். ஏனெனில் தானத்தில் சிறந்த தானம் பசு தானம் ஆகும். நகரத்தில் வியாபாரம் செய்து வந்த சில குழுவினர் மிகவும் சிக்கனமாக இருப்பர். ஆனால் எத்தகைய மங்கள நிகழ்வுகள் வந்தாலும் பசுவைத் தானம் செய்வது அன்றைய வழக்கமாக அவர்களிடம் இருந்து வந்துள்ளது.
ஏனென்றால் பசு யாரிடமும் எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் பாலைத் தருவதால் அன்றைய மக்கள் பசுவைத் தானம் செய்வதைச் சிறப்பாகக் கருதினர். எனவே அனைவரும் “ஆ” தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் வாழ்வில் தன் கடமையை ஆற்றாது (செய்யாமல்) போகிறான் என்பதை உணர்த்தவே “ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment