பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 39                                                                                          இதழ் -
நாள் : 22-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
  

பழமொழி – 39

'  ஆறிலும் சாவு, நூறிலும் சாவு  '
 
விளக்கம் :
 
      ஒரு மனிதனுக்கு உலகில் வாழும் காலத்தில் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பதை ஆறு வயதிலும் சாவு (இறப்பு) வரலாம் நூறு வயதிலும் சாவு வரலாம் என்று நாம்  இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.


'  ஆறிலும் சாவு, நூறிலும் சாவு  ' 
 
உண்மை விளக்கம் :
 
     இப்பழமொழி மகாபாரதப்போரில் கர்ணனுக்குச் சொன்னதாகும். மகாபாரதப் போரானது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகும். இதில் கர்ணன் பஞ்ச (ஐந்து) பாண்டவர்களுடன் ஆறாவதாக இணைந்தாலும், கௌரவர்கள் நூறு போரில் ஒருவராக இணைந்தாலும் சாவு (இறப்பு) உறுதி என்பதை கர்ணனுக்கு உணர்த்தவே நம் முன்னோர்கள் இத்தகைய பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment