இதழ் - 73 இதழ் - ௭௩
நாள் : 17-09-2023 நாள் : ௧௭-0௯-௨௦௨௩
விகுதி
பகுபதம்
- ஒரு சொல்லைப் பிரித்தால் இறுதியில் நிற்பது விகுதி ஆகும்.
- விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதனால் இது இறுதி நிலை எனப்படும்.
- விகுதி திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
- எச்சம், தொழிற்பெயர், ஏவல், வியங்கோள் அவ்வவற்கு உரிய விகுதி பெறும். விகுதி வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் முதலிய பல இலக்கண பொருண்மைகளை உணர்த்தவும் பயன்படுகிறது.
சான்று
- நடந்தான் - ஆன் ஆண்பால் விகுதி
- நடந்தாள் - ஆள் பெண்பால் விகுதி
- நடந்தனர் - அர் பலர்பால் விகுதி
- நடந்தது - து ஒன்றன்பால் விகுதி
- நடந்தன - அ பலவின்பால் விகுதி
நன்னூல் ”அன்” என்று தொடங்கி ”உம்” என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது.
- அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்
- அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்
- அம், ஆம், எம், ஏம், ஓம்
- கும், டும், தும், றும்
- ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர்,
- க, ய, உம் - என்பனவாம். ( நன்னூல் நூற்பா எண்.140)
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment