பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 156                                                                                           இதழ் - ௧
நாள் : 04 - 05 - 2025                                                                        நாள் :   - ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 156

எய்ப்பினில் வைப்பென்பது

விளக்கம்
 
ஒருவன் தான் சேமித்து வைத்த செல்வத்தைப் பிறருக்காகப் பயன்படுத்தாமல் மறைத்து  வைப்பது நன்மை தராது என்பது இப்பழமொழியின் பொருளாகும். 



எய்ப்பினில் வைப்பென்பது

உண்மை விளக்கம்

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'.

ஒருவன் தான் வாழும் காலத்தில் சேர்த்து வைத்த செல்வம் பின்னாளில் பயன்படும் என்று பதுக்கி வைத்தல் அறிவற்ற செயலாகும். அத்தகைய செல்வம் இப்பிறவியலும் மறுபிறவியிலும் நன்மை தராது. அறிவுடைய சான்றோர், தாம் சோ்த்து வைத்த செல்வத்தைத் தாமும் அனுபவித்து அதைப் பிறருக்கும் பயன்படுத்துவர். அப்பயன் இம்மையிலும் மறுமையிலும் தமக்கு பலன் கிடைக்கும் என்பதைக் குறிக்கவே 'எய்ப்பினில் வைப்பென்பது' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…


முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment