பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 196                                                                           இதழ் - ௧௯௬
நாள்  :  05 / 04 / 2026                                                     நாள்   :  0௫ / 0௪ / ௨௦௨௬

 


ஆறும் குளமும் பெயரால் எழுந்த ஊர்கள்

திருப்பராய்த் துறை

    காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் திருப்பராய்த் அப்பெயா பெற்றது எனலாம். காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட பரமனை,
"பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் 
திருப்ப ராய்ந்துறை மேவிய செல்வரே”
எனச் சிறப்பித்துப்  பாடினார் திருநாவுக்கரசர். இந்நாளில் இத்துறை திருப்பலாத்துறை என்று வழங்கும்.


திருப்பாலைத்துறை

    காவிரியாற்றங்கரையில் உள்ள மற்றொரு துறை பாலைத்துறையாகும். அத்துறையில் காட்சியளிக்கும் இறைவனை,
"மருவு நாண்மலா மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரோ”
என்று பாடியருளினார் திருநாவுக்கரசர். பாலைத்துறை உடைய பரமனைப் பாலைவன நாதா் என்று இன்றளவும் வழங்குதலால், பாலை மரங்கள் நிறைந்த துறையாக அது முற்காலத்தில் இருந்ததாகத் தோன்றுகிறது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .


முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment