இதழ் - 68 இதழ் - ௬அ
நாள் : 13-08-2023 நாள் : ௧௩-0அ-௨௦௨௩
உரிச்சொல்
உரிச்சொல்லின் வகைகள்
உரிச்சொல் இரண்டு வகைப்படும்.
- ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல்
- பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்
சால, உறு, நனி, தவ, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும். எனவே. இவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல் எனப்படும்.
“சால, உறு,தவ, நனி,கூர்கழி, மிகல்.”
( நன்னூல், நூற்பா. எண். 456 )
சான்று
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று - சால
- உறுபசி - உறு
- நாட்டினைக் காப்போர் நனிசிறந்தவரே - நனி
- தவத்தினும் தானம் தவப்பெரிது - தவ
- களி கூர் மனம் - கூர்
- கழி பேருவகை - கழி
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment