இதழ் - 172 இதழ் - ௧௭௨
நாள் : 31 - 08 - 2025 நாள் : ௩௧- ௦௮ - ௨௦௨௫
அகப்பொருளில் சொல்லப்பட்ட முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் பற்றி அறிந்தோம். ஐந்திணைகள் ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலங்களை முன்பே அறிந்தோம்.
சிறுபொழுது,பெரும் பொழுது ஆகியவற்றில் இவை இவை இந்த திணைக்கு உரியவை என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர் ஐந்திணைக்கும் பொழுது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு பெரும் பொழுதுகள் வைகறை
நெய்தல் ஆறு பெரும் பொழுதுகள் ஏற்பாடு
பாலை இளவேனில், முதுவனில், பின்பனி நண்பகல்
- சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றில் இவை இவை இந்த திணைக்கு உரியவை என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
- ஐந்து நிலங்களுக்கும் ஒரே மாதிரியான பொழுதுகள் வருவதில்லை.
- ஒவ்வொரு திணைக்கும் மேலே கூறப்பட்ட காலங்கள் பொருத்தமானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- நிலமும், பொழுதும் அத்திணைக்கு உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment