பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 135                                                                                       இதழ் - ௧
நாள் : 24- 11 - 2024                                                                       நாள் : ௨௪ -  - ௨௦௨௪



இலக்கணப்போலி

விளக்கம்
  • இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்றுதொட்டு வழங்கப்படுவது இலக்கணப்போலி எனப்படும்.

சான்று
  • கால்வாய்        -     வாய்க்கால்
  • தசை             -    சதை
  • நகர்ப்புறம்       -   புறநகர்

நிலைமொழிகள் முன் பின்னாக மாறி வருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது. 

வகைகள்
  • இலக்கணப் போலி முதற்போலி, இடைப் போலி, கடைப்போலி  என மூவகைப்படும்.
சான்று
  • முதற்போலி -  மஞ்சு – மைஞ்சு
  • இடைப்போலி -  அரசன் – அரைசன்
  • கடைப்போலி -  அறம் – அறன்

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment