இதழ் - 176 இதழ் - ௧௭௬
நாள் : 28 - 09 - 2025 நாள் : ௨௮ - ௦௯ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
காடுகள்
ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்குகின்றன. திருமறைக்காடு முதலிய காட்டுத் திருப்பதிகளை ஒரு பாசுரத்திலே தொகுத்துப் பாடியுள்ளார் திருநாவுக்கரசர். திருமறைக்காடு முதல் திருவெண்காடு ஈறாக எட்டுப்பதிகள் அப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமறைக்காடு
இக்காலத்தில் வேதாரண்யம் என வழங்கும் திருமறைக்காடு மூவர் தேவாரப் பாடலும் பெற்ற பழஞ்சிறப்படைய ஊராகும். மறைவனம் என்றும், வேதவனம் என்றும் திருஞானசம்பந்தர் அப்பதியைப் பாடியுள்ளார். நான்மறைகளும் ஈசனை வழிபட்ட இடம் திருமறைக்காடு என்பர்.
"சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காடு"
என்னும் தேவாரத்தில் அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment