பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 176                                                                                    இதழ் - ௧
நாள் : 28 - 09 - 2025                                                                 நாள் :   - ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 176

ஏவலாள் ஊருஞ் சுடும் '
விளக்கம்

    ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது இப்பழமொழியின் பொருளாகும். 

உண்மை விளக்கம்

    பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
    இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
    மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குலாய்!
    'ஏவலாள் ஊருஞ் சுடும்'

        இங்கு "பழவினை" என்பது முற்பிறவியில் செய்த வினையைக் குறிக்கிறது.
    
    ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதற்கு, அவனை ஏவினவனை நோக வேண்டுமே அல்லாமல், அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. 

        அது போலவே, இன்று நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் முன் பிறவியிலேயே நாம் ஆத்திரங்கொண்டு செய்த பழைய வினைகளே காரணம் என்ற உண்மையைச் சிந்தித்து அறிய வேண்டும். தம்மைத் துன்பப்படுத்தும் பகைவர்களை, நொந்து கொள்வது ஏற்புடையது இல்லை என்பதையும் நாம் படும் துன்பத்திற்கு நாமே காரணம் என்பதையும் குறிக்கவே 'ஏவலாள் ஊருஞ் சுடும்' என்று இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது.

இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment