பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் : 1                                                                           இதழ் :
நாள் : 1-5-2022                                                               நாள் :
-ரு-௨உஉ

     தமிழ்கூறும் நல்லுலகத்தில் வழங்கப்படும் ஊர்ப்பெயர்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப மருவி வந்துள்ளன. அவற்றின் பழைமையான பெயர்களை மக்கள் அறியாமல் போகும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்கும் முயற்சியாக இந்தப் பகுதி அமைகிறது. முதலில் நமது பழைமையான தமிழக ஊா்ப்பெயா்களை நம் தமிழ் மக்களுக்கு அறியச் செய்தல் வேண்டும். இச்செயல் தமிழின் தொன்மைக்கு வலிமை சேர்ப்பதாக அமையும் எனலாம்.

ஒரு மொழியின் பாதுகாப்பு என்பது அம்மொழி பேசும் மக்களின் மொழியறிவு, மொழி ஈடுபாடு இரண்டால் அமையும் என்பதை நாம் அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இன்று அழைக்கப்படும் ஊர்களுக்குப் பழங்காலத்தில் வழங்கப்பட்ட பெயர்களையும் அதன் காரணத்தையும் அறிதல் மொழியறிவு பெறுதலின் ஒரு பகுதியாகக் கருதுகிறோம். 

(ஒவ்வொரு இதழிலும் பழங்காலத்தில் வழங்கப்பட்ட ஐந்து ஊர்ப்பெயர்கள் இடம்பெறும்.)

இன்றைய ஊர்ப்பெயர்      –  அன்று வழங்கப்பட்ட ஊர்ப்பெயர்

1. திருச்செங்கோடு –  திருக்கொடிமாடச் செங்குன்றூர்

திருச்செங்கோடு
திருச்செங்கோடு
  • சிவந்தநிறமாக இருக்கும் மலை என்பதால் செங்கோடு’ என்று பெயர் பெற்றது. செம்மை என்றால் சிவப்பு என்றும், கோடு என்றால் மலை என்றும் பொருள். 
  • பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்காட்டாங்குடி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.  

2.     திருச்செந்தூர் – திருச்சீரலைவாய்

திருச்செந்தூர்
  • மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் அலைவாய்’ என்றுஅழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருச்சீரலைவாய்' என்று பெயர்பெற்றது.

3.     திருத்தணி - செருத்தணிகை

திருத்தணி
  • தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் (செரு – கோபம், போர்) தணிந்து அமர்ந்த தலம் செருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது.

4.     பழமுதிர்சோலை    - பழம் உதிர் சோலை

பழமுதிர்சோலை
  • பழமுதிர்சோலை என்னும் பெயர் முருகப்பெருமானது திருவிளையாடலின் அடியாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒளவைக்கு நாவல் பழங்களை உதிர்த்தார் என்பதால் இப்பெயர் பெற்றது என்றும், சில விளக்கங்களைக் கேட்டு, தமிழ் மூதாட்டியின் வாயிலாகப் பயனுள்ள நீதிகளை உலகுக்கு உணர்த்தினார் என்றும் கூறப்படுகிறது.

5.       பழனி - திருஆவினன்குடி

பழனி
  • சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. அந்த மரபில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் மயிலுக்குப் போர்வை அளித்தவன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர்.
  • திரு என்ற இலக்குமி தேவியும், என்ற காமதேனுவும், இனன் என்ற சூரியபகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி (திருவாவினன்குடி) என்று பெயா் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
  • நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடாக இத்தலத்தை, "தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று பாடியுள்ளார்.
( தொடர்ந்து அறிவோம்... )
 
 
 

No comments:

Post a Comment