பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 39                                                                                          இதழ் -
நாள் : 22-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
        
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
  • ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை மசூதியில் தொழுகை நடத்தப்படும்.
  • ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படும்.
  • மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டவுடன் 10 நிமிடங்கள் ஓய்வெடுப்பது நல்லது.
  • நண்பகல் சாப்பாடு சாப்பிட்டவுடன் 10 நிமிடங்கள் ஓய்வெடுப்பது நல்லது.
  • எலுமிச்சை ரசத்தில் உப்புச் சேர்த்துக் குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
  • எலுமிச்சைச் சாற்றில் உப்புச் சேர்த்துக் குடிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
  • பிரத்யட்சமாகக் காண்பவை எல்லாம் மெய்யல்ல.
  • கண்கூடாகக் காண்பவை எல்லாம் மெய்யல்ல.
  • சொப்பனம் எல்லாம் மெய்யாகாது.
  • கனவு எல்லாம் மெய்யாகாது.

    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment