இதழ் - 159 இதழ் - ௧௫௯
நாள் : 01 - 06 - 2025 நாள் : ௦௧ - ௦௬ - ௨௦௨௫
கிருஸ்தவ சமய சீலராகிய செயின்ட் தாமஸ் என்பவர், கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்கு வந்து, மயிலாப்பூரில் சில காலம் தங்கியிருந்து சமய போதகம் செய்தார் என்றும், அதனால் விளைந்த குரோதத்தால் கொலையுண்டு இறந்தார் என்றும் கர்ண பரம்பரைக் கதையொன்று உண்டு. அவர் வசித்த இடம் மயிலாப்பூரை அடுத்த சாந்தோம் என்பர். அவர் கொலையுண்ட இடம் சென்னைக்கு ஆறு மைல் தூரத்தில் அவர் பெயரால் வழங்கும் செயின்ட் தாமஸ் மலையென்றும் கூறுவர். பதினாறாம் நூற்றாண்டில் பரங்கியர் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்பட்ட போர்ச்சுகீசியர் அம்மலையில் வசித்தமையால் பரங்கிமலை என்னும் பெயரும் அதற்கு அமைவதாயிற்று. நானூறு ஆண்டுகளுக்கு முன்னே அன்னார் கட்டிய தேவமாதாவின் கோவில் இன்றும் பரங்கிமலையின் உச்சியில் காணப்படுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment